ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஸ்ரீநகர் , 13 ஜூலை (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) தெரிவித்துள்ளது. பூமிக்கடியி
A


ஸ்ரீநகர் , 13 ஜூலை (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று

அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் சில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA