Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில்
வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன், தென்தாமரைக்குளம் பகுதியில் 200 கிராம் குட்கா விற்பனை செய்ததாக கடந்த ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக சிகிச்சைக்காக முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam