கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு
கரூர், 13 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் உள்ள 10 கோயில் நிலங்களை பட்டா செய்து பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் திருத்தொண்ட
உயர்நீதிமன்றம்


கரூர், 13 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் உள்ள 10 கோயில் நிலங்களை பட்டா செய்து பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி,

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள முறையீட்டில்,

சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முறையாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோவில் நிலத்தை தனி நபருக்கு பட்டா மாற்றி தருவது தொடர்பாக தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதம் கிளம்பியுள்ள சூழலில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P