திடீர் ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆளுநரை சந்தித்து புதிய தமிழகம் கட்சி மனு
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கவலைக்குரியதாக இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தெரிவித்துள
Kri


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கவலைக்குரியதாக இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை நேரில் அழைத்து அவர்களின் ராஜினாமா முழுமையான சுய விருப்பத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டதா, அல்லது ஏதேனும் அரசியல் அழுத்தம், நிர்ப்பந்தம் அல்லது பேரம் காரணமாக ஏற்பட்டதா என்பதை உரிய முறையில் விளக்கம் கேட்டு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்த விளக்கம் முழுமையாக திருப்திகரமாக கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்றும், இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து விரிவான மனுவை வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் திடீரென பதவி விலகும் சூழல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடைமுறைகள் அவசியம் என்றும், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் ராஜினாமா தொடர்பான நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ