Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 13 ஜூலை (ஹி.ச.)
கரூரில் முன்னாள் அமைச்சரும் தற்போது தவெகவில் இணைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அதிமுகவின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக தான் தவெகவில் இணைந்துள்ளோம், இதேபோல் பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
தவெக மற்றும் யாருடைய அழுத்தம் காரணமாகவும் செல்லவில்லை, நான் என்னுடைய சுயமான விருப்பம் நிர்வாகிகளுடைய விருப்பத்தால் மட்டுமே தான் தவெகவில் இணைந்துள்ளோம்.
கோவில் நிலம் விவகாரம்: கடந்த ஆட்சியில் வேண்டும் என்று பிரச்சினை செய்தார்கள். குறிப்பாக வெண்ணெய் மலை 0 சதவீதமாக மாற்றி உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் கோவில் நிலம் விவகாரம் குறித்து, குழு அமைத்து சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
மகாபலிபுரத்தில் இணைப்பு விழாவில் நான் பேசியதை குதிரை பேரம் என தவறாக சித்தரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN