மதுரை கோர விபத்து - உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இரங்கல்
மதுரை, 13 ஜூலை (ஹி.ச.) மதுரையில் காலை அரங்கேறிய கோர விபத்து தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி அருகே அர
Minister Vishwanathan


மதுரை, 13 ஜூலை (ஹி.ச.)

மதுரையில் காலை அரங்கேறிய கோர விபத்து தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் விரைந்து பூரண குணமடைந்து நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.

அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பான முறையில் வழங்க தமிழக அரசின் மருத்துவத்துறையை கேட்டு கொண்டுள்ளேன்.

விபத்து குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு, காயமடைந்த அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகள், அவசர நிவாரணங்கள் மற்றும் தேவையான அனைத்து அரசின் உதவிகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரில் நானும் பங்குகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN