Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
கும்பகோணம், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பேருந்தில் பயணித்துள்ளார்கள்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4 பேர், மேலூர் அரசு மருத்துவமனையில் 16 பேர் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 5 பேர் மொத்தமாக 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிகிச்சையில் இருந்து வரும் அனைவரும் நலமுடன் உள்ளார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் கூடுதல் சிறப்பு உதவித்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அரசு சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் கூடுதலாக நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN