Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 13 ஜூலை (ஹி.ச.)
மயிலாடுதுறை நகரில், கேணிக்கரை என்ற இடத்தில், புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் பூமி பூஜையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்கள், அண்ணாமலை 2031-ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு பதில் அளித்த செல்வி ஆர்.சுதா,
தமிழ்நாட்டில் பிஜேபியால் கால் வைக்க முடியவில்லை, பிறகு அண்ணாமலை 2031-ல் எப்படி ஆட்சிக்கு வர முடியும் என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பியபடி சென்றார்.
அண்ணாமலை குறித்த அவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN