சென்னை மாணவர்களுக்காக 42 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இன்று முதல் சேவை தொடக்கம்
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் புதிய சிறப்பு பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்
Bus


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் புதிய சிறப்பு பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி பள்ளிக்குச் சென்று திரும்புவதற்காக, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருந்து பள்ளிகளுக்கும், பள்ளி முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 41 பள்ளிகளுக்கு நாள்தோறும் 42 சிறப்பு பேருந்துகள் மூலம் 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையின் மூலம் பள்ளி நேரங்களில் பொதுப் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதுடன், மாணவர்கள் பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் பள்ளிக்குச் சென்று திரும்பும் வசதி மேம்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ