Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 13 ஜூலை (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே
நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்த தமன், விடுமுறை தினமான நேற்று தனது பெரியப்பா மகன் பிரவீன்குமாருடன் காரில் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், காருக்குள் சிறுவன் இருந்ததை கவனிக்காமல் பிரவீன்குமார் காரை பூட்டிவிட்டு சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவன் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதையடுத்து நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் காரை திறந்து பார்த்தபோது, சிறுவன் காருக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam