Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 13 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறித் தனிநபர்களுக்கு முறைகேடாகக் கிரயம் செய்து கொடுத்ததாகப் பழனி கூடுதல் பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உட்பட 4 பேர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
முதற்கட்டமாக வழக்கு பதிந்துள்ள போலீசார் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அடிவாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.,) தலைமையிலான போலீசார் தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடான பத்திரப்பதிவு நடந்ததற்கான பின்னணி குறித்தும், அது சம்மந்தப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
முதற்கட்டமாக போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு என்ற முறையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு மேலும் சில ஆவணங்களை கேட்டுள்ளோம்.
வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடருவோம் என்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN