திருநெல்வேலியில் பிளம்பர் படுகொலை - முக்கிய குற்றவாளி ரஞ்சன் கைது
திருநெல்வேலி, 13 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலி டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் 38. பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை சங்கரன்கோவில்-டவுன் சாலையில் உள்ள கோட்டையடி உய்கா
திருநெல்வேலியில் பிளம்பர் படுகொலை - முக்கிய குற்றவாளி ரஞ்சன் கைது


திருநெல்வேலி, 13 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலி டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் 38.

பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை சங்கரன்கோவில்-டவுன் சாலையில் உள்ள கோட்டையடி உய்காட்டு சுடலைமாடன் கோயில் அருகே நடந்து சென்றபோது, மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ஆவுடையப்பன் உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ரஞ்சன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b