பூமணி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளி
நயினார்


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழ் இலக்கிய உலகின் தனித்துவமான படைப்பாளியும், கரிசல் மண்ணின் வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் தனது எழுத்தின் வழியே காலத்திற்கும் அழியாத ஆவணங்களாகப் பதித்த பூமணியின் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.

எளிய மனிதர்களின் வாழ்வை அசாதாரண இலக்கிய உயரத்திற்கு உயர்த்திய அவரது எழுத்து, தமிழ் மொழியின் பெருமையையும் செழுமையையும் உலகறியச் செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பூமணியின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கும் படைப்புலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பூமணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், அவரது இலக்கியப் படைப்புகளும் சிந்தனைகளும் தலைமுறைகள் பலவற்றிற்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் நிலைத்திருக்கும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P