சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் பூமணி மறைவு - முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்
சென்னை, 13 ஜூலை (ஹி.ச) சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் (பூமணி) மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
Cm


சென்னை, 13 ஜூலை (ஹி.ச)

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் (பூமணி) மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

கரிசல் நிலத்தின் மண் வாசனையையும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், வரலாற்றின் ஆழமான உண்மைகளையும் தனது படைப்புகள் மூலம் பதிவு செய்து தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான எழுத்தாளர் பூமணி என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் என்றும், 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலக்கியத் துறையில் பூமணி ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ