Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை (ஹி.ச)
கத்தார் நாட்டின் முன்னாள் அமீரும், தற்போதைய அமீரின் தந்தையுமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி மறைவையொட்டி, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தின் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமீரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (ஜூலை 13) நாடு முழுவதும் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேசியக் கொடி வழக்கமாக ஏற்றப்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.
மேலும், அரசு துக்கத்தை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வ அரசு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அரசு துக்கம் கடைபிடிக்கப்பட்டு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ