காரைக்குடியில் இரண்டு மாத பெண் குழந்தை விற்பனை - தாய் உட்பட 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு
காரைக்குடி, 13 ஜூலை (ஹி.ச) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை ரம்ஜான் பிவி, ஜ
Sale of two-month-old baby girl in Karaikudi


காரைக்குடி, 13 ஜூலை (ஹி.ச)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இந்தக் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சி நடந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை ரம்ஜான் பிவி, ஜெமிமா பேகம் மற்றும் அசார் நிஷா ஆகிய மூன்று பெண்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, குழந்தையை பெற்றெடுத்த தாய் லட்சுமி மற்றும் குழந்தையை வாங்கியதாக கூறப்படும் ரம்ஜான் பிவி, ஜெமிமா பேகம், அசார் நிஷா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தை விற்பனைக்கான காரணம் குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b