Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தனது உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்திருந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தனது உடலில் டீசல் ஊற்றிக்கொள்ள முயன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, கோட்டை காவல் நிலையத்தில் சாமுண்டீஸ்வரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam