Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 ஜூலை (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P