Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 ஜூலை (ஹி.ச.)
ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஒரு திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நாவலாசிரியரும் ஆவார்.
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை வென்ற பெருமைக்குரியவர்.
பிறப்பு: ஜூலை 13, 1953 அன்று தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்தார்.
பெற்றோர்: ராமசாமி மற்றும் அங்கம்மாள் இணையர் ஆவர்.
கல்வி: வடுகபட்டியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மனைவி: வானம்பாடி இயக்க பெண் கவிஞரான பொன்மணி வைரமுத்து என்பவரை மணந்தார்.
அறிமுகம்: 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
இவருடைய முதல் பாடல் 'இது ஒரு பொன் மாலைப் பொழுது' ஆகும்.
உலகத்தமிழர்களிடையே இந்தப் பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடித்தந்தது.
மேலும்,பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
சாதனை: கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 5,800-க்கும் மேற்பட்ட காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.
இலக்கியப் பங்களிப்புகள்:
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய உலகிற்குப் பங்காற்றியுள்ளார்.
கள்ளிக்காட்டு இதிகாசம்:
இந்த நாவலுக்காக 2003 ஆம் ஆண்டு இவருக்கு மதிப்புமிக்க சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இதர படைப்புகள்:
'கருவாச்சி காவியம்', 'மூன்றாம் உலகப் போர்' போன்ற நாவல்களும், 'வைகறை மேகங்கள்', 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' போன்ற கவிதை நூல்களும் குறிப்பிடத்தக்கவை.
முக்கிய விருதுகள் தேசிய விருதுகள்:
தமிழ்நாட்டின் மாநில விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான இந்திய அரசின் தேசிய விருதை 7 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதுகள்:
கலைத்துறையில் இவரின் பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
மாநில அரசு விருதுகள்:
தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.
கவியரசு என்றும், கவிப்பேரரசு என்றும், காப்பியப் பேரறிஞர் என்றும், காப்பிய சாம்ராட் என்றும் பல பட்டங்களை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.
Hindusthan Samachar / Durai.J