தவெக-வுக்கு எதிரான பொதுநல வழக்கு வாபஸ் - அரசு விளக்கத்துக்கு பிறகு மனுதாரர் முடிவு
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், கல்வி நிறுவனங்களை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தியதாகக் கூறி, தவெக-வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ப
TVK Vijay


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், கல்வி நிறுவனங்களை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தியதாகக் கூறி, தவெக-வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ