தர்மபுரியில் அடுத்தடுத்து இரு கொலைகள் - பதற்றத்தில் மக்கள்
தர்மபுரி, 13 ஜூலை (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஒரே கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக சகோதரர்கள் குடும்பங்களுக்கு இடையே
தர்மபுரியில் அடுத்தடுத்து இரு கொலைகள் - பதற்றத்தில் மக்கள்


தர்மபுரி, 13 ஜூலை (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஒரே கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக சகோதரர்கள் குடும்பங்களுக்கு இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், வெங்கடேசன் என்பவரின் மனைவி தனலட்சுமிக்கும், வெங்கடேசனின் தம்பி மாரிமுத்துவின் மகன் செந்தில் அரசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில் அரசு, சுத்தியலால் தனலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், மாரண்டஹள்ளி அருகே சீரண்டபுரம் கிராமத்தில் மற்றொரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

விவசாயியான மாதேஷ் என்பவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து கத்தி மற்றும் உடைந்த பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இந்த தாக்குதலில் மாதேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரட்டை கொலை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்த மாரண்டஹள்ளி காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனலட்சுமி மற்றும் விவசாயி மாதேஷ் ஆகியோரின் கொலை சம்பவங்கள் தொடர்பாக மூன்று பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.

இந்த கொலைகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b