Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜூலை (ஹி.ச.)
வியட்நாம் நாட்டில் கடந்த வாரம் ஹா லாங் விரிகுடா பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 இந்தியர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, வியட்நாமில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து உடல்களை அடையாளம் காணும் பணிகளையும், சட்டப்பூர்வ நடைமுறைகளையும் முடித்துள்ளனர்.
15 இந்தியர்கள் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக படகின் கேப்டனை கைது செய்துள்ள போலீசார் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து உடல்களை தாயகம் கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளது.
இன்று இரவு வியட்நாமில் இருந்து புறப்படும் விமானம் டெல்லி விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து உயிரிழந்தவர்களின் சொந்த மாநிலங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b