சென்னையில் நேபாள பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபர் கைது
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) நேபாளத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தன் என்பவர் அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகி அத்துமீற முயன்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்த
Assault on a Nepali woman


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

நேபாளத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஆனந்தன் என்பவர் அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகி அத்துமீற முயன்றுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால், ஆனந்தன் அங்கிருந்து தப்ப முயன்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அண்ணா நகர் போலீசார் விரைந்து செயல்பட்டு ஆனந்தனை கைது செய்தனர்.

அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் தனியாகவோ அல்லது வேலை முடிந்து நள்ளிரவிலோ திரும்பும் முக்கியப் பகுதிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b