Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 14 ஜூலை (ஹி.ச.)
செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஆசிரியர்கள், பாதுகாவலர், காவலாளி மற்றும் சாலையில் சென்றவர்களை தாக்கி, பைக் மற்றும் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற 12 சிறார்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நேற்று ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், மீதமுள்ள 11 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த 8 பேரும், திண்டுக்கல், கோவை, நாமக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேரும் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தப்பிய சிறார்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்றிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தப்பியோடிய சிறார்களை விரைவில் கைது செய்யும் நோக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P