குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக க்யூஆர் கோடு அறிமுகம்
தென்காசி, 14 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சீசன் காலகட்டங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக தற்போது தென்காசி
QR code


தென்காசி, 14 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு சீசன் காலகட்டங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக தற்போது தென்காசி மாவட்ட காவல் துறையினர் க்யூஆர் குறியீடு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அதாவது, குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காவல்துறையின் அவசர உதவி எண் மற்றும் தீயணைப்புத் துறையை உதவி மற்றும் அருகாமையில் உள்ள மருத்துவமனைகள், அருகாமையில் உள்ள கார் பார்க்கிங் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு கியூஆர் கோடுவை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த க்யூஆர் கோடுவை ஸ்கேன் செய்வதன் மூலம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் எளிமையாக பெறலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN