கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுவன் சித்திரவதை -உடந்தையாக இருந்த தவெக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு
கடலூர், 14 ஜூலை (ஹி.ச..) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் அருண்குமார் (35) மற்றும் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் தாயுடன் வசித்து
தவெக


கடலூர், 14 ஜூலை (ஹி.ச..)

கடலூர் மாவட்டம்,

மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் அருண்குமார் (35) மற்றும் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது 7 வயது மகன் தாயுடன் வசித்து வந்த நிலையில், அப்பெண்ணுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களது சந்திப்புகளுக்கு இடையூறாக இருந்த சிறுவனை அவர்கள் இருவரும் அடித்தும் சித்திரவதையும் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுவன், கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த தனது தந்தையைத் தொடர்புகொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு அழுதுள்ளான்.

விடுமுறையில் ஊர் திரும்பிய அருண்குமார், மகனின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கடலூர் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்கு அனுமதித்தார்.

பின்னர் சிறுவன் கூறிய தகவலின் அடிப்படையில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுவனின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடையவர் கடலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த சிவகுரு என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, சிவகுருவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட கழகச் செயலாளருமான ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam