திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்த விவகாரம் - பதிவு எழுத்தர் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பேரூராட்சியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வரும் பெ. முத்துசாமி, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கெங்கவல்லி தனித்தொகுதி திமுக வேட்பாளர் கே. சின்னதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, அவருக்கு சால்வை அணிவி
High court


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பேரூராட்சியில் பதிவு எழுத்தராக பணியாற்றி வரும் பெ. முத்துசாமி, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கெங்கவல்லி தனித்தொகுதி திமுக வேட்பாளர் கே. சின்னதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, அவருக்கு சால்வை அணிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த ஜூன் மாதம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பெ. முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் கீரிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ