காஞ்சிபுரத்தில் பணி நேரத்தில் அரை நிர்வாண மது போதையில் மின்வாரிய ஊழியர்-சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
காஞ்சிபுரம், 14 ஜூலை (ஹி.ச.) தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக மின்தடை தொடர்பாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், மின்வாரிய நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் பகுதியில் இரவு நேர மின்வெட்டு அதிகமாக பதிவாகி வருவத
மதுபோதை


காஞ்சிபுரம், 14 ஜூலை (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக மின்தடை தொடர்பாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், மின்வாரிய நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் பகுதியில் இரவு நேர மின்வெட்டு அதிகமாக பதிவாகி வருவதால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அருகே உள்ள வெள்ளாகுளம் துணை மின் நிலையத்தில், பணி நேரத்தில் மின்வாரிய ஆப்ரேட்டர் ஒருவர் அதீத மதுபோதையில் அரை நிர்வாண நிலையில் படுத்திருந்ததாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டிருந்ததாகவும், அதே நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam