Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் திடல் அருகே உள்ள அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு ஈரோட்டை அமைப்பின் தலைவரும், சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, பணிகளை பூமி பூஜையுடன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாடு இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகின்றன.
நிதி நெருக்கடி உள்ள சூழ்நிலையிலும் கூட, அதற்கான நிதிகளை எவ்வாறு திரட்டுவது என்று ஆராய்ந்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
வரலாற்றில் முதல் முறையாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 ஆண்டு கால திட்டத்திற்காக 463 திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, இந்தியாவில் யாரும் செய்திட முடியாத சாதனைகளை தமிழ்நாடு அரசு படைத்து வருகிறது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஓடையைத் தூர்வாரி, ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஈரோடை அமைப்பு மற்றும் சுதா மருத்துவமனை பங்களிப்போடு துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கீரிப்பள்ளம் ஓடை தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று விரைவில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ சத்தியபாமா, கோபி நகரமன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் கே.கே. கந்தவேல் முருகன், தவெக மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN