Enter your Email Address to subscribe to our newsletters

அத்திப்பள்ளி, 14 ஜூலை (ஹி.ச.)
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் நாளை (ஜூலை 15-ஆம் தேதி) விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஓசூர் ரிங் ரோடு அருகே உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து பேரணியாக புறப்பட்டு, விவசாயிகள் அத்திப்பள்ளி எல்லைப் பகுதியை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து பெருந்திரளாக பங்கேற்க உள்ளதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக விவசாயிகள் வலியுறுத்தவுள்ளனர்.
எல்லைப் பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்தை முன்னிட்டு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b