தொடர் சரிவில் தங்கம் விலை - நகை பிரியர்கள் உற்சாகம்
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தங்கம் விலையில் காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் ச
தங்கம்


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தங்கம் விலையில் காலை மாலை என 2 முறை மாற்றம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P