அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 66% இடங்கள் நிரம்பின - 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்த இடங்களில் 66 சதவீதம் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இ
Council


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்த இடங்களில் 66 சதவீதம் நிரம்பியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,26,959 இளநிலை இடங்கள் உள்ள நிலையில், இதுவரை 84,397 இடங்கள் நிரம்பியுள்ளன.

சேர்க்கை பெற்றவர்களில் 33,947 மாணவர்கள், 50,428 மாணவிகள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தினர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுகலைப் படிப்புகளுக்காக 110 கல்லூரிகளில் 24,334 இடங்கள் உள்ளன.

இதுவரை 18,899 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ள நிலையில், 12,796 பேர் சேர்க்கைக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், 21 அரசு கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ள நிலையில், 4,814 பேர் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 2,170 பேர் சேர்க்கைக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த நாட்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கல்லூரி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ