தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசின் முக்கியமான மூன்று துறைகளில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசின் முக்கியமான மூன்று துறைகளில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்த கழகத்தின் நிர்வாகத்தை அவர் இனி கவனிப்பார்.

அதேபோல், நடைபராமரிப்பு மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரகத்தின் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணன் உன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் நோய்த்தடுப்பு பணிகளை மேம்படுத்தும் பணியில் இவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பி. அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகளை இந்த கழகம் மேற்கொண்டு வரும் நிலையில், அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.

நிர்வாகக் காரணங்களுக்காக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b