Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 14 ஜூலை (ஹி.ச.)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4–0 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜேக்கப் பெதெல், பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜோப்ரா ஆச்சர், லியம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷீத் ஆகியோர் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க உள்ளனர்.
டி20 தொடரில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
அதேவேளையில், டி20 தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுத்து ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA