Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 14 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம்
அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பிலோமினா–பெஞ்சமின் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN