Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கடத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனது கட்சி நிர்வாகி மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலில் தனது கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும் என்றும் கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ