காசர்கோட்டில் அரிசி ஏற்றி சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்
கேரளா, 14 ஜூலை (ஹி.ச.) கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் குட்டிக்கோல் பகுதியில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில
விபத்து


கேரளா, 14 ஜூலை (ஹி.ச.)

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் குட்டிக்கோல் பகுதியில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் பயணித்த இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P