கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு,5 பேர் கவலைக்கிடம்
திருவள்ளூர், 14 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் என்ற தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சா
விபத்து


திருவள்ளூர், 14 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்கிளிங் என்ற தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் இன்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், 5 பேர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாய்லர் வெடிப்பைத் தொடர்ந்து தொழிற்சாலையில் தீப்பிடித்த நிலையில், கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam