Enter your Email Address to subscribe to our newsletters

பீகார், 14 ஜூலை (ஹி.ச.)
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய தியோகர் (Deoghar) கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை நிறுத்திவைப்பு (Suspension of Sentence) உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துள்ளது.
இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் முன்பே நிறுத்திவைத்து, அவர் தாக்கல் செய்த குற்றவியல் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும் வரை அந்தச் சலுகையை வழங்கியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை என்று கூறி தலையிட மறுத்தது.
அதே நேரத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள லாலு பிரசாத் யாதவின் குற்றவியல் மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P