Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, கிரிப்டோகரன்சி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரிடம் ரூ.15 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படும் விருதுநகரைச் சேர்ந்த குமரேசன், சக்திவேல், வெற்றிவேல் ஆகியோர், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை கோமதிபுரம் மகிழம்பூ வீதியில் உள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்ற மூவரும், அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜாவின் மனைவி சுகன்யா, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி, ஆவியூர் சோதனைச் சாவடியில் காரை மடக்கிப் பிடித்து ராஜாவை மீட்டனர்.
தொடர்ந்து, குமரேசன், சக்திவேல், வெற்றிவேல் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN