தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் தலையிட வேண்டாம் - ஆளுநருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்
சென்னை, 14 ஜூலை (ஹி.ச) தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையை (NEP) திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது கண்டனத்திற்குரியது என்றும்
Manickam


Jh


சென்னை, 14 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையை (NEP) திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது கண்டனத்திற்குரியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கு எதிராக செயல்பட்டதைப் போல, தற்போதைய ஆளுநரும் அதே போக்கைத் தொடர்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை சர்க்யூட் ஹவுஸில் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த முயன்றதையும், தற்போது தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதையும் ஆளுநர்களின் அத்துமீறலாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நீட், இந்தி திணிப்பு, தற்போது தேசிய கல்விக் கொள்கை என பாஜகவும் அதன் ஆளுநர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும்; டெல்லி அல்ல என்று மாணிக்கம் தாகூர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ