Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் விடுதிகளின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசை கண்டித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
பழனி கோயில் விடுதிகளின் கட்டணங்கள் ஜூலை 13 முதல் ரூ.300 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அறைகள் கிடைக்காமல் ஏற்கனவே சிரமப்படும் ஏழை மற்றும் எளிய முருக பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்றபோது கோயில்களை நேரடி கண்காணிப்பில் வைத்திருப்போம் என்று கூறிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தற்போது ஏழை பக்தர்களுக்கு கட்டண உயர்வை பரிசாக வழங்கியுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பராமரிப்புச் செலவைக் காரணம் காட்டி, ஆன்மிகத் தலங்களை வருவாய் ஈட்டும் வணிக மையங்களாக மாற்றும் போக்கை தமிழக அரசு கடைப்பிடிப்பதாகவும், இது ஆன்மிகத்திற்கு எதிரான அணுகுமுறை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, உயர்த்தப்பட்ட தங்குமிடக் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், போதிய தங்குமிட வசதி இல்லாததை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஏழை பக்தர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ