Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 14 ஜூலை (ஹி.ச.)
உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த டெல்லியைச் சேர்ந்த சிலர், சுற்றுலா தலத்திலும் பொது இடத்திலும் மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட உள்ளூர்வாசிகள், பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், போதையில் இருந்ததாக கூறப்படும் சுற்றுலா பயணிகள், படகோட்டிகளான மொகித் மற்றும் ஜீத்பால் ஆகிய இருவரை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களை அடித்து, உதைத்ததுடன், ஆடைகளை கழற்றி அவமரியாதையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த வழக்கில் பெண் ஒருவர் உள்பட 5 பேரை சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA