Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 14 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் தினேஷ் (19), 'நரி' என்றழைக்கப்பட்டவர். இவருக்கும் சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சில நண்பர்களுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமரசம் பேசுவதாகக் கூறி நண்பர்கள் தினேஷை சந்தப்பேட்டை பகுதிக்கு அழைத்துச் சென்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தினேஷின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam