Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 14 ஜூலை (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு கடல் நீரானது உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருவது மட்டுமல்லாது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றது.
மேலும் கடலுக்கு உள்ளே உள்ள நத்தை அரிய வகை சிறிய சங்குகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றது.
மேலும் இதுகுறித்து கடல் சார் அதிகாரிகளிடம் கேட்டபோது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்குவதும் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும் இதன் மூலம் மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
கடல் நீர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் தான் படகுகளை கரைக்கு ஏற்றவோ இறக்கவும் முடியும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN