Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 14 ஜூலை (ஹி.ச.)
ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், முதலில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam