வரங்கல், ஆதிலாபாத் விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும் - மத்திய அமைச்சரிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை
புதுடெல்லி , 14 ஜூலை (ஹி.ச.) டெல்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, அபிவிருத்தி பணிகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது என்றும், அரசியல் என்பது தேர்
A


புதுடெல்லி , 14 ஜூலை (ஹி.ச.)

டெல்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

அபிவிருத்தி பணிகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது என்றும், அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் இருக்க வேண்டும்.

தெலங்கானாவில் அமைக்கப்பட உள்ள வரங்கல் (மாமுனூர்) மற்றும் ஆதிலாபாத் விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

வட தெலங்கானாவின் முக்கிய மையமாக வரங்கல் விளங்கி வருவதாகவும், காகத்திய மெகா டெக்ஸ்டைல் பார்க், காஜிபேட் கோச் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் திட்டங்களால் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் ரேவந்த் ரெட்டி கூறினார்.

இதனால் வரங்கல் விமான நிலையம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரங்கல் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், உடனடியாக ஒப்பந்தப்புள்ளிகளை கோரி பணிகளை தொடங்கி, 2028-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதிக்குள் விமான நிலைய பணிகளை முடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், விமான நிலையத்தின் வடிவமைப்பு காகத்தியர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆதிலாபாத்தில் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்துடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சிவில் விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

வரங்கல் மற்றும் ஆதிலாபாத் ஆகிய இரு விமான நிலையங்களிலும் விமானப் பயிற்சி நிறுவனங்களை (எப்.டி.ஓ.) தொடங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியிலிருந்து விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணை வரை நீர்விமான சேவைகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, நாட்டின் பிற மாநிலங்களை விட வேகமாக விமான நிலையங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தெலங்கானா அரசு முடித்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

அபிவிருத்திக்கு அரசியலுடன் தொடர்பில்லை என்றும், மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA