திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் - சிகிச்சை அலட்சியத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
திருச்சி, 14 ஜூலை (ஹி.ச.) திருச்சி மாநகர் வாசன்வேலி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், ஆட்டோ வாங்கித் தரக் கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில
போராட்டம்


திருச்சி, 14 ஜூலை (ஹி.ச.)

திருச்சி மாநகர் வாசன்வேலி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், ஆட்டோ வாங்கித் தரக் கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, இவரை ஏன் வைத்துள்ளீர்கள், முடித்து விடுங்கள் என்று மருத்துவர் கூறியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam