வியட்நாம் படகு விபத்து - கோவை விமான நிலையம் வந்தடைந்த 6 தமிழர்களின் உடல்கள்
கோவை, 14 ஜூலை (ஹி.ச.) வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் இன்று கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன. உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள
Vietnam Boat Accident


கோவை, 14 ஜூலை (ஹி.ச.)

வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் இன்று கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன.

உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் முதலில் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேரின் உடல்களில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் இன்று காலை சென்னை மற்றும் கோவைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன.

இதில், 4 பேரின் உடல்கள் சென்னை விமான நிலையத்துக்கும், 6 பேரின் உடல்கள் கோவை விமான நிலையத்துக்கும் கொண்டு வரப்பட்டன.

கோவைக்கு கொண்டு வரப்பட்டவர்களில், திருச்சியைச் சேர்ந்த சாகித் அப்துல்லா, பாலாஜி, அழகுராஜன், தருமபுரியைச் சேர்ந்த செந்தில்குமார் அழகுவேல், பழனியைச் சேர்ந்த முருகபிரபு ஆறுமுகம் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தராஜன் ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழர்கள், 3 பேர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 2 பெண்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில்

(Cargo Terminal) உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் காத்திருந்தனர். உடல்களை அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல 7 அமரர் ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அதிகாரிகள் அளித்த தகவலின்படி, முதல் கட்டமாக காலை 11.35 மணியளவில் 3 உடல்கள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

மீதமுள்ள 3 உடல்கள் பிற்பகல் 2.10 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN