‘நலம் TN’ புதிய இணையதள சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். தொடர
‘நலம் TN’ புதிய இணையதள சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் 'நலம் TN' (Nalam TN) புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்-அப் செயலியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

பின்னர் மருத்துவத்துறைக்கு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக அறக்கட்டளை, சமூக பொறுப்பு நிதி மூலம் 'நலம் TN' என்ற இணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை மருத்துவமனைகளுக்கு எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,

மண் மீதும் மக்கள் மீதும் மாறாத அன்பு கொண்டவர் முதல்வர் விஜய். தமிழகத்தில் தற்போது நடப்பது அன்பு சாம்ராஜ்யம்.

இதை யாராலும் அசைக்க முடியாது. மக்கள் இதயங்களில் அமர்ந்து அவர்களது குறைகளை தீர்ப்பரே உண்மையான தலைவர். உதாரணம் முதல்வர்.

திருமணம், பிறந்தநாள் என்ன நிகழ்வாக இருந்தாலும் 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் 'நலம் TN' அமைப்புக்கு நீங்கள் வழங்கலாம்.

எந்த மருத்துவமனைக்கு நீங்கள் நிதி கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து நன்கொடை தரலாம்.

உங்களிடம் இருந்து பெறப்படும் நிதி வெளிப்படுத்தன்மையாக இருக்கும்.

என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b